January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்ட விரோதமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்துடனும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்னாள் பிரதமர் ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட 20 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்துக்கொண்டு, இறுதி அறிக்கைக்கு எதிராக போராடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.