November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனையில் வரலாற்றுப் பதிவு

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி (ASPI) வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இன்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய பரிவர்த்தனை முடிவில், அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி 7985 புள்ளிகளாக காணப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இது முந்தைய நாள் பதிவை விடவும் 387.19 புள்ளிகள் மற்றும் 5.10 வீத அதிகரிப்பாகும்.
இதற்கு முன்னர் ஜனவரி 22 ஆம் திகதி அதற்கு முந்தைய நாள் பதிவை விடவும் 332.18 புள்ளிகளால் நாளாந்த பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி அதிகரித்திருந்தது.

அதன் பின்னர் ஜனவரி 27 முதல் 9 நாட்களில் 7 நாட்கள் பங்குப் பரிவர்த்தனை வீழ்ச்சியடைந்திருந்ததுடன், கடந்த 4 நாட்களிலும் தொடச்சியாக விலைச் சுட்டி வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்நிலையில் விலைச் சுட்டி இன்று அதிகரித்துள்ளதுடன், பங்குச்சந்தையின் நாளாந்த புறழ்வு 5170.5 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.