
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ள ‘தனுரொக்’ கோஷ்டியின் தலைவர் தனு வாள் வெட்டுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து- இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.