July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளே அதிகளவில் வருகின்றன’: ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றுள் 90 வீதமானவை காணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளர்.

கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளை ஆய்வுசெய்வதற்கான நிபுணர் குழுவின் திருகோணமலை மாவட்ட அமர்வு நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்  90 சதவீதமானவை காணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும் இவற்றை தீர்க்க துறைசார் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சட்ட ஏற்பாடுகளுக்கமைய மக்களின் பிரச்சனைகளை மனிதாபிமான அடிப்படையில் அதிகாரிகள் நோக்கல் மூலம் அதிகமான பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை நிபுணர்குழுவுக்கு 1500இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை தொடர்பான பரிந்துரைகளை உரிய அதிகாரிகள் பொறுப்புடன் வழங்கல் வேண்டும்.

சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தை சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக மாற்றியமைக்க அனைவரும் தம் வகிபாகத்தை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுதுள்ளார்.