எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மோசடிகள் இடம்பெறலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காதலர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்படுகின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை போலி செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு சிறப்புக் குழு செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காதலர் தின விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவினரின் அனுமதி கிடைக்பெற்றிருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான காலப்பகுதிகளில் போலியான அழைப்புகள் தொலைப்பேசிகளுக்கு வரலாம் என எச்சரித்துள்ள அவர் பண மோசடிகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.