அரசியல் பழிவாங்கல் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் முழுமையாக கிடைத்தவுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னைய ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தமது ஆட்சியில் முக்கியமான இந்த இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும், விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.