February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியல் தீர்மானங்களுக்காக குழுவின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது”

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் சட்ட வைத்திய அதிகாரியான சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படுமென்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பான தீர்மானங்களை விடயத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப குழுவே எடுக்க வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ள, குறித்த தொழில்நுட்ப குழுவின் தலைவர் சன்ன பெரேரா, அரசியல் தீர்மானங்களுக்காக எங்களின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களை கொண்ட குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஆட்சியாளர்கள் மாற்ற முடியும். அதற்கு எமது குழுவினால் எதிர்ப்பு வெளியிட முடியாது, ஆனால் எமது குழுவின் தீர்மானத்தை அரசியல் காரணங்களுக்காக மாற்றியமைக்க முடியது என்று சன்ன பெரேரா மேலும் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.