
பிரித்தானியாவில் பரவும் வீரியமிக்க கொரோனா வைரஸின் புதிய ரகம், இலங்கையின் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வவுனியா, அவிசாவளை, பியகம ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதிலேயே கொரோனா வைரஸின் B.1.1.7 என்ற புதிய ரகம் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள COVID-19 இன் மூன்றாவது ரகம் இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பிரித்தானியாவுடன் தொடர்புடைய கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கொரோனா வைரஸின் புதிய ரகங்கள் உலகலாவிய ரீதியில் தற்போதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.