October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுளை மாவட்டத்தில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது

File Photo

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் மடுல்சீமை உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று அதிகாலை சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த அதிர்வு 1.5 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் நான்கு தடவைகள் இங்கு நில அதிர்வுகள் பதிவானமையினால் அந்தப் பகுதி மக்களிடையே இது தொடர்பில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வு தொடர்பாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அங்கு ஆய்வுகளை நடத்தி வருகின்றது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்திலும் இதேபோன்ற அதிர்வுகள் ஏற்பட்டிருந்தது.

அடிக்கடி அங்கு பதிவாகும் அதிர்வுகள் குறித்து புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தினரும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் புவியியல் ஆய்வாளர்களும் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த அதிர்வுகளுக்கும், மலைநாட்டில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக் கூடுமெனவும், அது எந்த அளவில் ஏற்படும் என்பதனை கூற முடியாதிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.