
யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
போராட்டம் நடக்கும் இடத்தில் கண்காணிப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர்.

எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.
சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.
