July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்”

அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பட்டுக் கொள்கைகளால்,  சர்வதேசத்தினால் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கும் நிலையொன்று உருவாகி வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜீஎஸ்பி மற்றும் ஜீஎஸ்பி பிளஸ் சலுகைகள் பறிபோகும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் கட்டுப்பாட்டு சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது தேசிய மற்றும் சர்வதேச கடன்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே இறக்குமதி கட்டுப்பாட்டு பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த ஆரம்பித்ததாகவும், இதுவே தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமெனவும் தெரிவித்துள்ள அவர், இதிலிருந்து மீளாவிட்டால் நாடு பாரிய வீழ்ச்சிக்கு செல்லும் என்பதுடன் சர்வதேச பொருளாதார தடைக்கும் உள்ளாலாம் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.