அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திலே சந்திப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அன்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடையம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை வரவேற்கின்றதாகவும், அது தமது பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் இதுவரையில் மேற்கொண்டிருக்கும் அனைத்தும் ஜனநாயகத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளே என்றும் வெறுமனே தம் மீது நினைத்தவாறு குற்றம்சாட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.