
வவுனியா நகரசபை வாயிலில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனிதச் சங்கிலிப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக சத்தியாக் கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினர், தமக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த பொங்கு தமிழ் தூபி நேற்று நகரசபையால் முட்கம்பிகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பொது மக்களுக்கு சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அராஜகம் புரிகின்றதாகவும், ஊழியர்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது பொதுவான பிரச்சினையல்ல என்றும் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினையொன்றும் நகரசபை தவிசாளர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.
போராட்டம் என்று கூறிவிட்டு பொங்கு தமிழ் தூபிக்குள் குடித்துவிட்டு, முகம் சுழிக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்ட காரணத்தினாலேயே முட்கம்பியால் அடைத்ததாகவும் நகரசபை தவிசாளர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.