
Photo: Facebook/ Sudarshini Fernandopulle
கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான யோசனை துறைசார் நிபுணர் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அவர்களினாலேயே தீர்மானிக்க முடியுமெனவும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.
அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அது தொடர்பாக, இன்றைய தினம் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் சபையில் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பியினார்.
பிரதமரின் கூறியபடி கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்படும் என்று முஜிபுர் ரஹுமான் கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ பிள்ளே, குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எடுக்க முடியாது. அதனால் அந்த யோசனை துறைசார் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் இணக்கப்பாடுகளுக்கமையவே எங்களால் செயற்பட முடியும் என்றார்.