January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா- ஜப்பானுடன் இலங்கை செய்துகொண்ட துறைமுக உடன்படிக்கையை கிழித்தெறிய முடியாது’

நல்லாட்சி அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்துகொண்ட கொழுப்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கிழித்தெறிய முடியாது என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தீர்வொன்றுக்கு வருவதற்கான குழுவொன்றை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில், அரசாங்கம் முன்வைத்த யோசனைகளுக்கு இந்திய நிறுவனம் இணங்கவில்லை என்பதால், கிழக்கு முனையத்திற்கு முதலீட்டாளர்களை கொண்டுவரும் திட்டத்தில் இருந்து அரசாங்கம் விலகிக்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு முனையத்தின் 100 வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மேற்கு முனையத்தை சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.