
தேசிய ஆரம்பச் சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு அமைச்சு தனது உத்தியோக பூர்வ இணையதளத்தை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.
இவ் இணையதளம் ஊடாக பொதுமக்கள் தமது தகவல்களை வழங்குவதன் மூலம் தேசிய கொவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் இணைந்துகொள்ளமுடியும்.
அத்துடன் தடுப்பூசி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களையும் இணையதளம் வழங்குகிறது.
கொரோனா தடுப்பூசிக்கான பதிவுகளுக்கு… www.ehr.lk
அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் www.statehealth.gov.lk