January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவோம்’: பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனின் அழைப்பின் பெயரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இன்று கொழும்பில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஜெனிவா கூட்டத் தொடரின் போது, இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுக்கும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

ஜெனிவா விவகாரங்கள், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.