January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!

இலங்கையில் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தனிமைப்படுத்தல் பிரதேசங்களைத் தவிர்ந்த மேல் மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதற்கமைய மார்ச் 11 ஆம் திகதி க.பொ.த சாதாரண பரீட்சைகள் முடிவடைந்ததின் பின் மேல் மாகாணம் உட்பட தற்போது ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் அனைத்து பாடசாலைகளினதும் அனைத்து வகுப்புகளும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 412 பாடசாலைகளினதும் கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 589 மற்றும் 442 பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என மாவட்ட மேம்பாட்டுக் குழு கூறியுள்ளதாக கல்வி அமைச்சர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.