இலங்கையில் புதிதாக 12 மேல் நீதிமன்ற நீதியரசர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதியரசர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
என்.கே.டி.கே.ஐ. நாணயக்கார, ஆர்.எல். கொடவெல, வி.ராமகமலன், யூ.ஆர்.வி.பி.ரனதுங்க, எஸ்.எச்.எம்.என். லக்மாளி, டி.ஜீ.என்.ஆர். பிரேமரத்ன, டபில்யு.டி. விமலசிறி, எம்.எம்.எம்.மிஹால், மஹீ விஜேவீர, ஐ.பி.டி. லியனகே, ஜே. ட்ரொட்ஸ்கி மற்றும் என்.ஏ.சுவந்துருகொட ஆகியோரே இவ்வாறு மேல் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.