கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் கேள்வி- பதில் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஒழுங்குப்பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்புகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ‘நீரில் கொவிட் -19 வைரஸ் தொற்றாது என அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமா’ என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த பிரதமர், “முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம்” என வாக்குறுதியளித்தார்.