
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நாளைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2017 மற்றும் 2018 நிதியாண்டுகளுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் செயற்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யும் விதமாகவே கிரிக்கெட் நிறுவனத்திற்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதற்கு முன்னரும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், கணக்காய்வு அறிக்கை மற்றும் செயற்திறன் குறித்த மதிப்பாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அடுத்த கட்ட ஆய்வுகளுக்காகவே நாளைய தினம் கோப் குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.