January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்”

இலங்கையில் 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, 32 பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக தனித் தனியாக சட்டமா அதிபரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆராய்வதற்காக சட்டமா அதிபரினால் 12 சட்டத்தரணிகளை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரின் பெயர்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.