
யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்தின்உள்ளே நுழையும்படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னணி
இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் திலீபன் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில், பொலிசார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு குவிந்த பொலிசார் மாணவர்களை பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்.
எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனர். இதனால், மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸாரின் உதவிக்கு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
