January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை நீதியரசர்கள் குழாம் நியமனம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற மனுக்களை பரிசீலிக்க 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரசங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் இதுவரையில் 18 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை பரிசீலிக்கவென ஜயந்த ஜயசூரிய , புவனேக அலுவிஹாரே , பிரியந்த ஜயவர்தன , விஜித் மலல்கொட , சிசிர டி அப்ரூ ஆகிய 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனுக்கள் செப்டம்பர் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.