உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் ஆவணங்களும் முழுமையற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றவியல் விசாரணைகளும் ஆவணங்களும் முழுமையற்ற நிலையில் இருப்பதாக சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் ஆவணங்களும் முழுமையடையாத நிலையில், குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்ய முடியாதுள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை நடத்தி, கால தாமதமின்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.