
இலங்கையில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த தேர்தல்களைப் பார்க்கும் போது, இலங்கையில் 30 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முன்கூட்டியே வாக்களிப்பதன் அவசியம் இருப்பது தெளிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது அரச பணியாளர்களில் சில பிரிவினருக்கு மாத்திரமே முன்கூட்டிய வாக்களிப்பு வசதிகள் காணப்படுகின்றன.
இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 40 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்றும் அதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக முன்கூட்டிய வாக்களிப்பு வசதி இல்லாமையே என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.