தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இராணுவ வீரர்களைக் கொலை செய்ததாக கருணா அம்மான் தெரிவித்த கருத்தை மையமாக வைத்து, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தான் ஒரே இரவில் இரண்டு அல்லது மூவாயிரம் இராணுவத்தினரைக் கொலை செய்ததாக கடந்த பொதுத் தேர்தலின் போது கருணா தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து இலங்கையின் தெற்கில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதோடு, கடுவெல முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
கருணா அம்மானின் கருத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காரணத்தினாலேயே, குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.