November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் இரண்டு மில்லியன் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்’

நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் அடுத்த ஐந்து வருடத்தில் இரண்டு மில்லியன் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக கால்பந்தாட்ட தரப்படுத்தலில் இலங்கையை 150 ஆவது இடத்துக்கு முன்னேற்ற எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த ஆண்டிலிருந்து அரை தொழில்சார் லீக் மற்றும் தொழில்சார் லீக் கால்பந்தாட்ட போட்டிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் விளையாட்டுத்துறையை மீள் கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை 206 ஆவது இடத்தில் உள்ளதாகவும், நாட்டின் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘கால்பந்தாட்ட வெள்ளி’ என்ற வேலைத்திட்டத்தை உருவாக்கி, நாட்டின் தேசிய கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.