January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3333 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாலைதீவு , கட்டார் மற்றும் குவைத்தில் இருந்து வந்திருந்தவர்கள் என்று, தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 3142 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.இதன்படி தற்போது 178 பேரே வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.