
ஒக்டோபர் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த. உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதி நள்ளிரவு முதல் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளதுடன், 11 ஆம் திகதி 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடக்கவுள்ளது.
பொதுப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய கலந்துரையாடல்களை தடை செய்யும் சட்டத்தின் பிரகாரமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.