
இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த “கொழும்பு கடற்படை பயிற்சி- 2021” இன்று சயுர கப்பலில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கடல் பகுதியை மையமாகக் கொண்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படை வெளியீட்டு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக தலைமையில் மூன்றாவது கடற்படை பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகளின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் பயிற்சி, எந்தவொரு செயல்பாட்டு சவாலுக்கும் கடற்படைக் கப்பல் குழுவைத் தயார்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் எதிர்கால செயற்பாடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களும், விமானப்படையின் எம்ஐ -17, பெல் 412, பெல் 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு விமானமொன்றும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளன.