February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மார்ச் மாதத்திற்குள் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

மார்ச் மாதத்திற்குள் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பலருடன் நாளாந்தம் தொடர்பு கொள்வதால் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவதற்கான அவதான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும் என்றார்.

இதன் காரணமாக கொரோனா தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தாம் பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்துள்ள நிலையில் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.