
இலங்கையின் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்காகவே இந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து பின்னர் கலந்துரையாடப்பட உள்ளதாகவும், ஆரம்பமாக இந்த அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதே அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.