July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாரம்பரிய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக ஆதிவாசிகள் நீதிமன்றத்தில் மனு

தமது பாரம்பரிய நிலப் பிரதேசத்தை தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு எதிராக ஆதிவாசிகள் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பாரம்பரிய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான நிலையத்தின் பிரதிநிதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

தமது பாரம்பரிய நிலங்களை சோளப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் நிலப் பிரதேசங்களை மகவெலி அதிகார சபை பொறுப்பேற்று, தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்துகொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக மகவெலி அதிகார சபை, வன வளப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர், வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், வன வளப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.