June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”20 ஆம் திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது” – நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு!

உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

‘பாலேந்திரன் சட்டத்தரணிகள் நிறுவனம்’ ஊடாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்த வரைபின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமானது என்று தீர்ப்பளிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை கேட்டுள்ளது. 20 ஆவது திருத்தத்திற்கு எதிரா