October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மே மாத இறுதிக்குள் 13 மில்லியன் பொதுமக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி!

இலங்கையில், இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 13 மில்லியன் மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

18 வயதிற்கு குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ந்த ஏனைய சகலருக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் நான்காயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த மையங்களில் 132 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் சுகாதார பணியகம் கூறியுள்ளது.

தற்போது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை மேலும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, சீனாவின் தயாரிப்பான சைனோ போர்ம் கொவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சுகாதார பணியகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.