January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் புற்றுநோயால் வருடத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்”

இலங்கையில் புற்றுநோய் காரணமாக வருடாந்தம் 15 ஆயிரம் பேர் வரையிலானோர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் அமைந்துள்ளதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகமாக மார்பக புற்றுநோயும், ஆண்களுக்கு அதிகமாக வாய்ப் புற்றுநோயும் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நாளொக்கு புதிதாக 80 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணபபடுவதாகவும், இதன்படி வருடத்திற்கு சுமார் 30,000 பேர் வரையிலானோர் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர் என்றும்  விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார்.

இது நாட்டில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும், இதனால் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.