இலங்கையின் கிழக்குக் கடலில் தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பலால் ஏற்பட்டுள்ள கடல் மாசடைவு தொடர்பான ஆய்வு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் விசேட நிபுணர் குழுவினரால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி குவைட்டில் இருந்து இந்தியாவுக்கு மசகு எண்ணெய் எடுத்துச் சென்ற குறித்த கப்பல் அம்பாறை – சங்கமன்கண்டியிலிருந்து 31 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்கு உள்ளாகியிருந்தது.
இலங்கை – இந்திய கடற்படையினரின் ஒத்துழைப்புடன் 5 நாட்களின் பின்னரே அந்த கப்பல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கப்பலால் இலங்கை கடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இதன்படி அது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ள குழுவினர் அந்த அறிக்கையை தற்போது சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர்.