பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பயணம் இன்று கிளிநொச்சியில் நிறைவடைந்துள்ளது .
கிளிநொச்சி டிப்போ சந்தியை வந்தடைந்த குறித்த பேரணிக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இரணைமடு சந்தியில் கூடிய ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்து பேரணியை வரவேற்றனர். குறித்த பேரணியின் இன்றைய பயணம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.
நாளை அதே இடத்திலிருந்து பொலிகண்டிவரை பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.