File photo : Facebook/மாத்தளை தமிழர்
இலங்கை, மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசி மஹோற்சவம் நேற்று கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
எனினும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தளுக்கு அமைய தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும் மாசி மஹோற்சவ விழா இவ்வருடம் வழமை போல் இடம்பெறாது என ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அன்னதானம், தீ மிதிப்பு, காவடி ஊர்வலம், மற்றும் பஞ்சரத பவனி என்பன நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான அடியார்களே ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுவதனால் அடியார்கள் இயன்றளவு தங்களது இல்லங்களிலிருந்தே ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபடுமாறு கேட்டுக்கொள்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாசி மாதம் 15 ஆம் நாள் 27.02.2021 சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட இரதோற்சவம் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து மாசி மாதம் 6ஆம் நாள் (01.03.2021) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், இரவு துவஜானுவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவுள்ளன.
இதேவேளை, ஒவ்வொரு நாளும் நடைபெறும் வசந்த மண்டப பூஜையும் சுவாமி ஊர்வலமும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.