கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழரும், முஸ்லிம்களும் இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமைக் கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதுவும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலேயே நடந்துகொண்டு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணிதிரண்டு இருக்கின்றார்கள் எனவும் இந்தப்போராட்டத்துக்கு துணையாக நான் களமிறங்குமிறங்குகிறேன் எனவும் மனே கணேசன் தெரிவித்துள்ளார்.