இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, பல்வேறு இணையத்தளங்கள் மீதும் இன்று சைபர் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
google.lk டொமைனின் கீழ் உள்ள பல்வேறு இணையத்தளங்கள் மீதும் இன்று இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு இணையத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள், இலங்கையில் நிகழும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களையும் கோடிட்டுக்காட்டும் வேறு இணையத்தளங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள .lk இணையத்தளங்களை சீரமைக்கும் முயற்சியில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் CERT ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோர், கட்டாய ஜனாஸா எரிப்பு, தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள விவகாரம், ஊடக சுதந்திரம், தமிழ் அரசியல் கைதிகள், இனப்படுகொலைகள், தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாமை, இராணுவமயமாக்கல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களும் இவ்வாறு முடக்கப்பட்ட இணையத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
முடக்கப்பட்டிருந்த போது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை பின்வரும் டுவிட்டில் கண்டுகொள்ளலாம்.
https://twitter.com/sanjanah/status/1357904659537530882?s=20