இலங்கையில் பிரபல பாதாள குழு உறுப்பினரான ‘ரத்மலான ரொஹா’ என்று அழைக்கப்படும் ஹெரல் ரோஹன சில்வா, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) இரவு நீர்கொழும்பு கொச்சிகடை பகுதில் இருந்து படகில் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கைது செய்ய முயற்சித்த வேளையில், பொலிஸாரை நோக்கி ‘ரத்மலான ரொஹா’ துப்பாக்கி சூடு நடத்தி உள்ளதாகவும், இதன்போது பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கி சூட்டில் இவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு துப்பாக்கிகளும் , 3 இலட்சம் ரூபா இந்திய நோட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.