ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ளது.
இதனால் இன்று காலை முதல் அந்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த கற்பாறையை அகற்றும் வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி கலுகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான வீதியையும் தியகல, நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.