November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

27 அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக் குறைப்பு!

அடுத்த மூன்று மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் வகையில் 27 அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய விலை நிர்ணயங்களுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதோச விற்பனை நிலையங்களில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

விலை நிர்ணத்திற்கு அமைய சில அத்தியாவசிய பொருட்களின் புதிய விலைகள்

அத்தியாவசிய பொருட்கள் தற்போதைய விலை நிர்ணய விலை
சிவப்பு அரிசி (1 Kg) Rs.106 Rs.93
வெள்ளை அரிசி (1 Kg) Rs.105 Rs.93
வெள்ளை நாடு அரிசி (1 Kg) Rs.109 Rs.96
சம்பா அரிசி (1 Kg) Rs.120 Rs.99
கீரி சம்பா அரிசி (1 Kg) Rs.140 Rs.125
கோதுமை மா (1 Kg) Rs.105 Rs.84
வெள்ளை சீனி (1 Kg) Rs.110 Rs.99
சிவப்பு சீனி (1 Kg) Rs.140 Rs.125
தேயிலை (100g) Rs.130 Rs.95
பருப்பு (1 Kg) Rs.188 Rs.165
இந்தியா பெரிய வெங்காயம் (1 Kg) Rs.140 Rs.120
உள்நாட்டு உருளைக்கிழங்கு (1 Kg) Rs.220 Rs.180
பாகிஸ்தான் உருளைக்கிழங்கு (1 Kg) Rs.190 Rs.140
பால் மா (400g) Rs.380 Rs.355