March 13, 2025 14:25:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி’ மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை திருகோணமலையில் இருந்து மூன்றாம் நாள் பேரணி ஆரம்பமானது.
கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான பேரணி நேற்று மாலை திருகோணமலையை சென்றடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணி ஆரம்மாகியுள்ளது.

மணலாறு வழியாக இன்று மாலை முல்லைத்தீவை சென்றடைந்த பின்னர் அங்கிருந்து நாளை காலை கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளது.