இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்று கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள மலைகள், குன்றுகளில் விகாரைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது அந்த இடங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான இடத்திலேயே திருக்கோணேஸ்வரம் ஆலயமும் அமைந்துள்ளதாகவும் எல்லாவல மேதானந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆரம்பத்தில் குருந்தகம என்றே அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மிகப் பெரிய பௌத்த கிராமம் இருந்திருக்கலாம் என்பதுடன், வடக்கிலேயே பௌத்த முக்கியத்துவமிக்க இடமாகவும் அது இருந்திருக்கலாம் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.