ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான கனேடிய தூதுவரையும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம் அவருடன் மதிய விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் ஷைபி, அரசியல் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவர் தோஸ்டன் பேக்பிரீட் ஆகியோரையும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.