
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 129 இலங்கையர்களைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி 129 சந்தேக நபர்களுக்கும் சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிதிக் குற்றங்களுடன் தொடர்புடைய 40 சந்தேக நபர்களும், வேறு சில குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேரும் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 87 சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான சந்தேக நபர்கள் டுபாய், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மறைந்திருப்பதாகவும், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவர்களைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.