July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாண்டியர் காலத்து’ மீன்- வாள் சின்னங்களுடன் மன்னாரில் கிடைத்துள்ள நாணயக் குற்றிகள்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மன்னார்- நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பெருந்தொகை நாணயக் குற்றிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காணியொன்றில் வீடு கட்டுவதற்காக மண்ணைத் தோண்டியபோது இந்த நாணயக் குற்றிகள் கிடைத்துள்ளன. சட்டி, பானை ஓட்டுத் துண்டுகளுடன் மொத்தமாக 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கிடைத்துள்ளன.

நானாட்டான் பிரதேச சபை அதிகாரிகளுக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் முருங்கன் பொலிஸார் மற்றும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வரலாற்றுச் சான்றுகளின்படி, மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொதுவாக பாண்டிய மன்னர்களின் காலத்துக்கு உரியவை என்று கருதப்படுகின்றது.

எனினும் தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே இந்த நாணயங்களின் காலம் மற்றும் அவற்றின் தொன்மை பற்றி அறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.